×

A50 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவி தாந்தோணி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

கரூர், பிப். 29: தாந்தோணி ஒன்றியம் கே.பிச்சம்பட்டி ஊராட்சி, வெள்ளியணை ஊராட்சி மற்றும் மணவாடி ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பகுதியில் உள்ள கே.பிச்சம்பட்டி ஊராட்சி நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.140.42 லட்சம் மதிப்பீட்டில் நடுகாணி கோயில் முதல் வெஞ்சமாங்கூடலூர் கிராமம் வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டபணிகளை பார்வையிட்டும், கே.பிச்சம்பட்டி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும்கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார்.

இதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.45.10 லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி செயலக கட்டிடம் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், வெள்ளியணை ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளை பார்வையிட்டும் மேலும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு விரைவாக செயல்பட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லேகா தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், விஜயலட்சுமி, உதவி பொறியாளர் சுரேஷ் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post A50 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவி தாந்தோணி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dandoni ,Karur ,District ,Thangavel ,Union ,K. Pichampatti ,Panchayat ,Vellianai Panchayat ,Manavadi Panchayat ,Dandoni Panchayat Union ,Dandoni Union ,Dinakaran ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...